Sri Bhashyam Distance Education Course Particulars

Respected Sri Bhashyam course aspirants.The Entrance exam questions shall be sent by E Mail on 25th June and snail mail on June18 ( allowing 1 week for postal delivery). Please answer them and send either handwritten or printout copy to our address (214,East Uthara Street, Srirangam,Trichy -6,Near ManavalamamunigaL Sannidhi,Srirangam)  by post/courier/messenger or in person.

We are sending questions by E mail due to shortage of our clerical staff who went on sudden leave. Even if u reply by email ( to meet last date considerations) we require (request) a paper copy also as Sri Vaishnava Sri swamy is not Net savvy and is comfortable with the print medium ( That is physical handwritten or typed papers only. Students from Overseas alone are exempted from sending physical papers) We are sorry for the inconvenience.Thanks in advance for your understanding.

ஸ்ரீ:
ஸ்ரீபாஷ்யம் அஞ்சல்வழிக் கல்வித் திட்டம் வினாத்தாள் – 25.6.2016 அன்று இரவு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வினாத்தாள் மூன்று பகுதிகளாக அமைந் துள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் 100 மதிப்பெண்கள் என்ற அடிப் படையில் 300 மதிப்பெண்கள் அளிக்கப்படவுள்ளன.
முதல் பகுதி: நான்கு விடைகள் கொடுத்து, சரியான விடையை தேர்வு செய்யும்படி 50 வினாக்கள். உதாரணத்திற்கு: ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை இயற்றியவர். (அ) வேதவ்யாஸர். ஆ) பராசரர். இ) வால்மீகி. ஈ) சௌனகர்).

இரண்டாம் பகுதி: கோடிட்ட இடத்தை நிரப்பவும். உதாரணத்திற்கு: த்ராவிட ஆம்நாயம் என்ற சொல்லிற்கு ……………………..  என்பது பொருளாகும்.

மூன்றாம் பகுதி: சரியா? தவறா? என்பதைக் குறிப்பிடவேண்டும். (டிக் செய்யவும்). உதாரணத்திற்கு:  (திருவாய் மொழியில் 1084 பாடல்கள் உள்ளன. சரி/தவறு.)

அஞ்சல்வழிக் கல்வித் திட்டத்தின் கீழ்ப்பயில விரும்பு வோர் குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 150 மதிப்பெண்களுக்குக் கீழ்ப் பெறுவோர் இந்தக் கல்வித்திட்டத்தின்கீழ்ப் பயில இயலாது. கேள்விகளுக்கான விடைகளை அனுப்பப்பட்டுள்ள இந்த வினாத்தாளிலேயே எழுதி அனுப்ப வேண்டும். தனியாக எந்தக் குறிப்பேட்டிலும் எழுதி அனுப்பக் கூடாது. இந்தக் கேள்விகளுக்கான விடைகளை எந்தப் புத்தகத்தையும் துணைகொள்ளாமல் உங்கள் மனச் சாட்சிக்கு மதிப்பளித்து அந்தர்யாமியாகிய எம்பெருமான் தேர்வு கண்காணிப்பாளராக உள்ளான் என்பதை நினைவில் கொண்டு பதில் அளித்திட வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதே குறிக்கோளாய் அமைந்திட வேண்டும். 300 மதிப்பெண்களுக்கு 300 பெற்றிட வேண்டு மென்ற நியதி இல்லை. அடிப்படையான ஸம்ப்ரதாய விஷயங் கள் உங்கள் நினைவில் உள்ளனவா? என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தத் தேர்வே ஒழிய, வேறு எந்த நோக்கமும் இல்லை.

இந்த வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி களுக்கு 26.6.2016 ஞாயிற்றுக்கிழமையன்று பகவத் ஸந்நிதானத்தில் விடைகளை எழுத வேண்டும். 27.6.2016 அன்று தபால் பெட்டியில் சேர்த்திட வேண்டும். 2 அல்லது 3 நாள்கள் கழித்து தபாலில் அனுப்பிடலாம் என்று இருக்கக் கூடாது. (Please despatch the answers As soon as possible . Candidates shall not be penalised for postal delays) இதற்கான விடைகளை அளிப்பதற்கு கால அவகாசம் 2 மணிநேரம். காலை 10.00 மணியிலிருந்து 12.00 மணிக்குள் நீங்கள் விடைகளை எழுதிட வேண்டும்.
விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214. கீழை உத்தர வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி – 6. கூரியர் அல்லது தபால் மூலம் அல்லது நேரில் கொடுக்கலாம். reachsrivaishnavasri@gmail.com  என்னும் இணைய முகவரிக்கும் கூடுதலாக அனுப்பலாம்(To meet last date requirements). Delays due to inadvertent circumstances shall be considered.( Example , Sastra Exams or contact session, Periods time as genuinely expressed by few aspirants)
உங்களுடைய மதிப்பெண்கள் செல்போனில் அல்லது இ-மெயிலில் தெரிவிக்கப்படும். நீங்கள் தேர்ச்சி பெற்றால் ரூ. 1,500 ஐ மூலமாகவோ, அல்லது நேரிலேயோ செலுத்தலாம் அல்லது Net Banking , Payable at par cheque In favour of  SRI RANGANACHIYAR ACHAGAM, SBI, Srirangam, IFS Code SBIN 0001983, Account No. 10465347428 மூலமாகவோ செலுத்தலாம். நாங்கள்  பணத்தைப் பெற்றுக்கொண்டபிறகு, உங்களுக்கு ரசீது ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதில் உள்ள எண்ணே, உங்கள் Registration number. எந்தத் தகவலை அறிய விரும்பினாலும் இந்த எண்ணைக் குறிப்பிடவும். பயிலுவோர்க்கான மற்றைய குறிப்புகள் அனுப்பப்படும் பாடக்குறிப்புகளில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
***

 

Welcome to Sri Vaishnava Sri, the Super Store for Sri Vaishnava Products