KuvaLakkudi Singam IyengAr

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த சான்றோர்கள்
1. திருவரங்கம் பெரியகோயிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் குவளகுடி சிங்கமய்யங்கார் ஸ்வாமி.
2. இவர் கி.பி. 1580ஆம் ஆண்டு மே மாதம் (ஸாதாரண வருஷம்-வைகாசி மாதம்) இவர் திருக்கச்சிக்கு அண்மையில் உள்ள குவளகடி என்னும் ஊரில் பிறந்தார்.
3. தன்னுடைய சொத்துக்களை மிகுந்த கவனத்துடன் மேற்பார்வையிட்டு பன்மடங்காகப் பெருக்கியதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து கிடைத்த வருமானம் அனைத்தையும் ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாபரணங்கள் ஸமர்ப்பித்திடவும், திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொண்டிடவும், கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்திடவும், வேதம் மற்றும் ஆகமங்கள் தழைத்தோங்கிட பாடசாலை ஒன்றை நிறுவிடுவதற்கும் செலவு செய்தார்.
4. இவர் தம்முடைய சொந்தப்பணத்தைக் கொண்டு கீழ்க்கண்ட கைங்கர்யங்களை மேற்கொண்டார்.
5. 1)ரங்க விமான கலசங்களுக்கு தங்கமுலாம் பூச, 2)ரத்தின அங்கியைப் புதுப்பிக்க, 3)பெரிய பெருமாளுடைய முழங்கைக் கவசங்களைப் புதுப்பிக்க, 4) நித்தியப்படி கிரீடத்தில் வைத்திழைத்த 14 வைரம், 5)முத்தங்கியைப் பிரித்துத் தைக்கக் கூலி, 6) நாச்சியாருக்கு தங்கச்சங்கிலி, 7)நாச்சியார் ஸிம்மாஸனம் புதுப்பிக்க, 8) அரவணைப் பிரஸாதத்துக்கு, 9) ஸந்நிதி மராமத்துக்கு, 10)பெரியபெருமாளுக்கு நிலம் வாங்க, 11)சந்திர புஷ்கரிணி ஜீர்ணோத்தாரணத்துக்கு 12) பெரியபெருமாளுக்கு சாற்றும் தைலத்திற்கு 13) ரேவதி உத்ஸவத்துக்கு 14) பாடசாலைக்காக. இதற்காக செலவு செய்த பணம் 2,03,000 ரூபாய்.
6. சிங்கமய்யங்கார் முன்னின்று பல தனிகர்களிடம் வசூல் செய்து கீழ்க்கண்ட கைங்கர்யங்களை மேற் கொண்டார். 1)திருமணத்தூணைப் புதுப்பிக்க வானமாமலை ஜீயரிடம் 2) யானைவாஹனம் புதுப்பிக்க ஜயராம் பிள்ளையிடம் 3)விஜயரங்க சொக்கநாத நாயக்கர் குடும்ப தந்த பொம்மைகளைப் புதுப்பிக்க ஸப்ஜட்ஜ் சடகோப நாயக்கரிடம் 4) வெள்ளிப்பல்லக்குக்காக கத்வால் ராணியிடம் 5) நாச்சியார் ஸிம்மா ஸனத்துக்கு ஜனார்த்தன ராமானுஜ தாஸனிடம். 6)ரத்தின அங்கிக்காக பலரிடம் வசூலித்தது 7) முத்தங்கிக்காக பலரிடம் வசூலித்தது 8) பெரியபெருமாளுக்கு நிலம் வாங்க பம்பாயில் வசூலித்தது. இந்த வகையில் 1, 25,000 ரூபாய் சிங்கமைய்யங்காரால் வசூலிக்கப்பட்டது.
7. சிங்கமய்யங்கார் ஸ்வாமியிடம் பக்தியும் கைங்கரிய ருசியுமே குடிகொண்டிருந்தன.
8. இவருக்கு அருகிலேயே வாஸம் கொண்டிருந்து ரங்கநாதனுக்கு ரத்தினம், தங்கம், பணம்-முதலியன யாசித்து பாண்டியன் கொண்டை, மகர கண்டி, ராஜமுடி, முதலியன ஸமர்ப்பித்து சிங்கமய்யங்காரின் 26ஆவது வயதில் அதாவது தாது வருஷத்தில் ஸித்தியடைந்த அல்லூரி ஸ்ரீவேங்கடாத்ரி ராமாநுஜ ஜீயர் ஒரு விசித்திரமான விரதத்தைக் கைக்கொண்டு வந்தார். பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க திருவாபரணங்கள் செய்வதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு 10ரூபாய் கிடைக்கவில்லையானால் அன்றைய தினம் பட்டினி கிடந்து வந்தார்.
9. அவ்வாறு அவர் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக சிங்கமய்யங்கார் ஸ்வாமி 10ரூபாயை ஒவ்வொரு நாளும் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதன் விளைவாக வேங்கடாத்ரி ஸ்வாமியின் கைங்கர்ய ருசியே சிங்கமய்யங்காருக்கு முதிர்ந்துவிட்டது.
10. சிங்கமய்யங்கார் 1933ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் தமது 84ஆவது வயதில் பரமபதித்தார்.
11. சிங்கமய்யங்கார் ஸ்வாமியின் ஒரேபுத்திரரும், கோயில் தர்மகர்த்தாவுமான குப்புஸ்வாமி அய்யங்கார் நெடுநாள் முன்னர் பரமபதித்தபடியால் அவருடைய குமாரர்கள் ஸ்ரீமான் சிங்கமய்யங்கார் M.ஃ.இ.கஸ்தூரிரங்க அய்யங்கார் மாஜி தர்மகர்த்தா, ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஏணிண.Mச்ஞ்டிண்tணூச்tஞு மூவரும் சிங்கமய்யங்காருடைய தர்ம சொத்துக்களைப் பரிபாலித்து வந்தனர்.
12. தர்மகர்த்தா பொறுப்பு வகிக்கும்போது இறப்பவருக்கு மட்டும் வழக்கமாய் அனுப்பப்படும் யானைமேல் அறுவாணம் என்ற உத்தமமான மரியாதை சிங்கமய்யங்கார் ஸ்வாமிக்கு அனுப்பப்பட்டது.
13. அவர் முன்பு தர்மகர்த்தாவாயிருந்தார் என்ற காரணத்திற்காக அன்று யானைமேல் அறுவாணம் அனுப்பப்படவில்லை. ஆனால் அவர் பெருமாளுக்குச் செய்த அளவற்ற கைங்கர்யம் ஒன்றை மட்டுமே நினைத்து அந்த மரியாதை அன்று அனுப்பப்பட்டது. அதிகாரத்தினால் கிடைக்கும் உத்தமமான மரியாதையை முதல் முதலாக சிங்கமய்யங்கார் ஸ்வாமி ஒருவரே பெருமாளுக்கு ஆச்சரியமான பல கைங்கர்யங்களைச் செய்து பெற்றவராகிறார்.
14. கீழைச் சித்திரை வீதியில் புகழ்பெற்ற கு.சி. பாடசாலை அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான வித்யார்த்திகள் வேதம் மற்றும் ஆகமங்களில் பயிற்சி பெற்று வந்தனர். கிடைத்தற்கரிய புத்தகங்கள் பல கு.சி. பாடசாலை நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
15. அவர் பிறந்த வைகாசி மாதத்தில் அவருடைய நினைவுகளைச் சுமந்து செல்வோமாக.