R.T.I.Questions posed to J.C. Srirangam and Srivilliputhur Temples

1. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 295, 295-அ பிரிவுகளும்-திருவரங்கம் கோயில் இணைஆணையர்
மற்றும் அறங்காவலர் மீதான குற்றச்சாட்டுகளும்

 

திருவரங்கம் பெரியகோயிலில் கடந்த 18-11-2010 அன்று நம்பெருமாள் திருமுன்பு கைசிக மாஹாத்மியம் படித்த ஸ்ரீவேதவ்யாஸ லக்ஷ்மீ நரஸிம்ம பட்டருக்கு, அந்தக் கைங்கர்யத்திற்குரிய மரியாதை யான பிரம்மரதம் மறுக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு மேலான ஒரு பாரம்பரியப் பழக்கம் தற்போதைய நிர்வாகத்தால் தேவையற்ற “சமுதாயச் சிந்தனை” என்னும் வாதத்தை முன்வைத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு எண்கள் 25 மற்றும் 28 (1) ஆகியவற்றின்படி நீண்ட காலப் பழக்கவழக்கங்களில் தர்மகர்த்தாக்களோ, செயல் அலுவலரோ தலையிட முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் சட்டத்தையும் நீதியையும் மதிக்காத ஒரு குழுவினர் பிரம்மரதத்தை நிறுத்தவதற்கான தீர்மானத்தை முன் மொழிந்தும், அதை அமுல் செய்தும் உள்ளனர்.
குற்றம் சுமற்றப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள திரு. தாமஸ் என்பவரை Chief Vigilance Commissioner  நியமித்துள்ள இந்த ஆட்சியின்கீழ் நீதிக்கும் நேர்மைக்கும் என்றும் இடமில்லை. அரசு எவ்வழியோ அவ்வழியே நடப்பர் அதன் அதிகாரிகள். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத பழைய நடைமுறைகளை மாற்றுவதில் குறிப்பாக இந்துக் கோயில்களில் இந்த அரசு தனிவிருப்பம் கொண்டு உள்ளது. சிறு பான்மையினத்தவர் மத நம்பிக்கைகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் கொண்டாடும் அரசியல்வாதிகள் இந்துக் களின் பழக்க வழக்கங்களைக் கண்டிப்பதும், திருக்கோயில் போன்றவற்றில் அளிக்கப்பட்டுவரும் மரியாதைகளை நிறுத்த முற்படுவதும், அச்சுறுத்துவதும் தேவையற்ற செயல்களாகும். உச்சநீதிமன்றம் 1958ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் சட்டம் ஒழுங்கினைக் காக்கும் காவல்துறை மதநம்பிக்கையைக் கேலி செய்வோர் மற்றும் அதன் பழக்க வழக்கங் களை பொருந்தாத காரணங்களை முன்நிறுத்தி, இல்லையெனச் செய்வோர்மீது இந்தியக்குற்றவியல் சட்டப் பிரிவு 295 மற்றும் 295அ ஆகியவற்றின்படி வழக்குப் பதிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கேயில் நிர்வாக அதிகாரிக்கு இந்தக் குற்றவியல் சட்டவிதிகளின் அடிப்படையில் நீண்டதொரு கடிதம் 22-11-2010 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி திருமண்காப்பைக் கேலி செய்வோர்மீதும் வழக்குத் தொடுக்கலாம். அவ்வாறு செய்வதற்கு யாரேனும் முன் வருவார்களா?

2. ஸ்ரீவில்லிபுத்தூர் தேவஸ்தானத்தினரிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதில்.

தகவல் அறியும் சட்டம் 2005இன்படி விபரங்களின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் திருக்கோயிலில் இருந்து 14/10/2010 அன்று பெறப்பட்ட பதில்.
கேள்வி-1: இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின்கீழ் அமைந்துள்ள அனைத்து திருக்கோயில்கள் திருமடைப்பள்ளிகளில் விறகுக்குப் பதிலாக ஃ.க.எ கேஸ் உபயோகத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?

பதில்: ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

கேள்வி: அவ்வாறாயின் அந்த ஆணையின் நகலை வேண்டுகிறேன்.

பதில்: ஆணை நகல் இவ்வலுவலகத்தில் இல்லை.
கேள்வி: குறிப்பாக பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோயிலில் விறகுக்குப்பதிலாக ஃ.க.எஐ உப யோகத்தில் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனவா?

பதில்: தற்போதைக்கு எதுவும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
கேள்வி: ஸ்ரீவில்லிபுத்தூரில் நீண்ட காலப் பழக்க வழக்கங்களுக்கு மாறாக திருமடப்பள்ளியில் கிணற்றிலிருந்து மின் மோட்டார் கொண்டு நீர் இறைக்கப்பட்டு வருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பதில்: நீண்ட கால பழக்க வழக்கத்திற்குட்பட்டு திருக்கோயில் நடை முறை கருதி திருக்கோயில் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வருவதால் மின் மோட்டார் கொண்டு நீர் இறைக்கப்படுவது மிகவும் அத்தியாவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது ஆகும்.
கேள்வி: திருமடைப்பள்ளியில் ஃ.க.எ உபயோகப்படுத்தப்படுவதும், மின் மோட்டார் கொண்டு கிணற்றிலிருந்து நீர் எடுத்து உபயோகம் கொள்வதும் ஆகம விதிகளுக்கு முரணானவை?

பதில்: திருக்கோயில் அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், பரிசாரகர்கள் போன்ற உள்துறைப் பணியாளர்களின் ஆலோசனை மற்றும் பூஜா விதிகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகம விதிகளுக்கு முரணானது என்ற வகையில் திருக்கோயில் உள்துறை பணியாளர்களிடமிருந்து எவ்வித ஆட்சேபணை எதுவும் இதுநாள்வரை வரப் பெறவில்லை.

***
4) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கீழ்க்கண்ட
தேதிகளில் திருவரங்கம் பெரியகோயில் இணைஆணையருக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

9-11-2010 அன்று அனுப்பப்பட்ட கடிதம்

1) 16-4-2003 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு. ஓ.க.சிவசுப்ரமணியம் அவர்கள் ரிட் மனு 11463/2003 – ஙி.க.M.க.Nணி 14419/2003, அளித்த உத்திரவின்படி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் மற்றும், தினப்படிகளில் அளிக்கப்பட வேண்டிய மரியாதைகளை அச்சிட்டு அந்த மரியாதைக்குரியோர்க்கு தரப் படவேண்டும் என்ற உத்திரவு நிறைவேற்றப்பட்டதா? இது குறித்து உங்கள் அலுவலகக் கடிதம் 1336/ 1412 டி 3, 1-12-2003 கிடைக்கப்பெற்றதும், அதில் திருத்தங்கள் செய்து மேலாளரிடம் 4-12-2003 அன்று ஒப்புதலுக்கு நேரில் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு எந்தத் தகவலும் எனக்கு அனுப்பப்படவில்லை.

2) ஒவ்வொரு நிர்வாக அலுவலகத்திலும் ‘Mச்ணதச்டூ‘ எனப்படும் குறிப்பேடுகள் தயாரிக்கப்பட்டு அதன் துணை கொண்டு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உதாரணத்திற்கு 1915ஆம் ஆண்டு ‘சாமான்கள் திட்ட ஜாபிதா’ தயாரிக்கப் பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் அந்தத் திட்ட ஜாபிதா பின்பற்றப்படுகிறதா?

3) இல்லையென்றால் புதுத்திட்ட ஜாபிதா தயாரிக்கப்பட்டுள்ளதா? எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது? அதற்கான ஒப்புதலை யார் வழங்கினார்கள்? அதன் நகல் ஸ்தலத்தார்களுக்கும், மரியாதையைப் பெற்றுக் கொள்பவருக்கும், மற்றைய நிர்வாக அதிகாரிகள் மேலாளர் களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?

4) பெருமாளுக்கு அந்தந்த வேளை ஆராதனங்களின்போது அதாவது பொங்கல், பெரிய அவசரம், க்ஷீரான்னம், அரவணை, வெள்ளிக் கிழமைகளில் புனுகுக் காப்பு, சிறப்புத்தளிகைகள் ஆகியவற்றின் போது ஸமர்ப்பிக்கப்படும் அமுதுபடிகளின் எண்ணிக்கை, அளவு, அதில் உபயோகப்படுத்தப்படும் பொருள்களுக்கான தரக்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றிய முழு விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி அளிக்க வேண்டுகிறேன்.

5) 1-11-2010 தேதி முதல் இன்றுவரை எத்தனை உபயதாரர்கள், தேவஸ்தான ஆவணங்களின்படி நித்ய ஆராதனங்களுக்கும், அமுதுபடிகளுக்கும் பணம் செலுத்தியுள்ளனர்?அவர்களின் முகவரியை அளித்திட வேண்டுகிறேன். அதற்கு ஒவ்வொரு உபயதாரர்கள் கட்டிய பல்வேறு வேளை ஆராதனங்களுக்கும் அமுதுபடிகளுக்கும் ஒவ்வொரு உபயதாரர்களும் கட்டிய கட்டணம் எவ்வளவு?

6) திருக்கோயில் ஆபரணங்களைப் பற்றிய பட்டியல் உள்ளதா? மற்றும் அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? அவ்வப்போது பழுது நீக்கப்படுகிறதா? ஆபரணங்கள் அனைத்தும் ஓரோர் முறை ஓர் ஆண்டில் நம்பெருமாள் மற்றும் பெரியபிராட்டியாருக்கு சாற்றப் படுகிறதா?

7) திருக்கோயிலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகள் “நாட்குறிப்புகள்” போல எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றதா? ஒவ்வொரு நாளும் நடைபெறும் செயல்பாடுகள் ஆண்டு முழுதும் தொகுக்கப்பட்டு, பாதுகாக்கப் பட்டு வருகிறதா?

8) அனைத்து செயல்முறைத் திட்டம், பழக்க வழக்கங்கள், மரியாதைகள், வழக்குகள் பற்றிய பட்டியல் ஆண்டு தோறும் தயாரிக்கப்பட்டு வருகிறதா?.

9) மேலும் மரியாதைகளைப் பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு என்னென்ன மரியாதைகள் அளிக்கப்படுகின்றன? அந்த மரியாதை எப்படி, எங்கு, ஆண்டில் எத்துணை முறை அளிக்கப் படுகிறது என்பதற்கான பட்டியல் தேவை?

10) இராப்பத்து 8ஆம் திருநாள் வேடுபறியன்று திருமங்கையாழ்வார் வேடுபறியின்போது திருமங்கை யாழ்வாராகவும், அவருடைய தோழர்களாகவும் வேடமிட்டு வருபவரை தோளில் தூக்கிச் செல் கிறார்களே! மனிதனை மனிதன் தூக்கிச் செல்வது தகாது என்னும் தங்களுடைய கோட்பாட்டின்படி இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சி தடை செய்யப்படுமா? யானை வாஹனத்தில் நான்கு மனிதர்கள் உட்கார, அவர்களைத் தூக்கிச் செல்வதும் தடை செய்யப் படுமா?

One thought on “R.T.I.Questions posed to J.C. Srirangam and Srivilliputhur Temples”

 1. The high court decided wp number 13055/2010 regarding bramharatham of srirangam temple.
  The temple never stopped bramharatham. Except carrying a man in the palanquin .
  The palanquin is not with the temple.
  If the honour is in tradition then why palanquin is with the house of vethaviyasabuttar .
  Hence the honour of carrying a man in palanquin is not tradition one.
  The carrying man in palanquin was introduced in brittish period only.
  Not in saint RAMANUJAS period.VAINAVAM ALWAYS STANDS FOR EQUALITY .
  It never pave way to castism , racism and palamquin buttarism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *