எழுத்தாளர் சுஜாதாவின் இளைய சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலனுக்கு பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யரின் அஞ்சலி  

 

rajagopal dasasthu revised

எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் (வயது 73) வியாழன் 13.6.2013 நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

இவர் பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி வம்சத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு மாதவன்,அரவிந்தன் ஆகிய 2 மகஙள் உண்டு.
குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. டெல்லி MTNLஇல் GM ஆகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . துளியும் கர்வம் இல்லாதவர்.பழகுதற்கு மிக இனிமையானவர் .பல விஷயங்களை படித்தவர் சரளமான ஆங்கிலம், தமிழில் மிக கஷ்டமான விஷயங்களையும் எளிதில் சுவைப்பட சொல்லக்கூடியவர்.

தன் அண்ணன் சுஜாதாவை (வயது 73) போல் இவரும் உயரமானவர் ( Literally and Figuratively).

இவர் ஸ்ரீரங்கம் வீதிகளில் ரெகுலர் வாக்கிங் செல்பவர்.

இவர் ஆசார்யன் திருவடி அடைவதற்கு முன் தினம் அடியேன் இவரைக் கந்தாடை ராமானுஜ முனி சன்னிதி வாசலில் சந்தித்துப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.இவர் மறைவு ஸ்ரீவைஷ்ணவ உலகத்துக்கு ஒரு மாபெரும அதிர்ச்சி.

பல விஷயங்களை பற்றி சுவாரஸ்யமாகப் பேசக்கூடிய ஒரு நல்ல மனிதர் . இனி அவர் இருக்க மாட்டார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

யாது காரணத்தாலோ நண்பர் சுஜாதா அவர்களுக்கு ஸ்ரீரங்கம் திருமங்கைமன்னன் படித்துறை தகனம் கிடைக்கவில்லை.அந்தக் குறை நண்பர் ராஜகோபாலனுக்கு இல்லை.

One Reply to “Srirangam Rangarajan @ Sujatha(S.R.) younger brother Srirangam Rajagopalan (S.R.) No More”

  1. RIP MR Srirangam Rajagopalan. I am Mr Ranagafajan’s classmates nephew. His class mate my uncle still lives in Srirangam Mr N S Narayanan, opp the Raghavendra mutt retd from BSNL. Possibly many may not knew him. His another famous classmate is Dr APJ Abdul Kalam – srinivasan , nanganallur. email – vu2ksv@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *