Mettazhagiyasingar @ Eduthakai Azhagiyanayanar Vaibhavam

மேட்டழகிய சிங்கர் ஸந்நிதியும், ஐந்துகுழி மூன்று வாசலும் 1) நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றிற்கும், ஐந்தாம் திருச்சுற்றான அகளங்கன் திருச்சுற்றிற்கும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தில் எழுந்தருளியுள்ளார் எடுத்தகை அழகியசிங்கர். 2) அவர் கோபுரத்தின் இடைப்பகுதியில் எழுந்தருளியிருப்பதாலும், அவரை சென்று ஸேவிப்பதற்குப் படிக்கட்டுகள் மீதேறி செல்லவேண்டியிருப்பதாலும் இந்த ஸந்நிதிக்கு மேட்டழகிய சிங்கர் என்ற பெயர் அமைந்துள்ளது. 3) ஸ்ரீபராசரபட்டர் “அஹமலமவலம்பஸ் ஸீததாமித்யஜஸ்ரம், நி வஸதுபரிபாகே கோபுரம் ரங்கதாம்ந:,  க்வசந ந்ருபரிபாடீவாஸிதம், க்வாபி ஸிம்ஹ க்ரமஸுரபிதமேகம் ஜ்யோதிரக்ரே சகாஸ்தி”. […]

Krishnadevaraya & Srirangam part 2 of 3

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாறும்,  அவருடைய திருவரங்கம் கோயிலைச் சார்ந்த அறப்பணிகளும்”-மூன்று பகுதிகளில் 2ஆம் பகுதி. 25. தாதாசாரியர் என்பவர் கிருஷ்ணதேவராயரின் ஸ்ரீவைஷ் ணவ குருவாவார். 26. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர், இருசமய விளக்கம் இயற்றிய அரிதாசர், திருவாரூர்த் தத்துவப் பிரகாசர் முதலிய தமிழ்ப் புலவர் களையும் இவ்வரசர் ஆதரித்து வந்தார். 27. கிருஷ்ண தேவராயர், நாடகம், சித்திரம், சிற்பம், சங்கீதம் முதலிய பிற கலைகளையும்  […]

Krishnadevaraya & Srirangam Part 1 of 3

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை வரலாறும்,  அவருடைய திருவரங்கம் கோயிலைச் சார்ந்த அறப்பணிகளும்”-மூன்று பகுதிகளில் முதற்பகுதி. 1. விஜய நகர மாமன்னரான ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அரியணை ஏறியது-1509ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதமாகும். ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அரியணை ஏறிய 500ஆவது ஆண்டு பூர்த்திவிழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2. தாது வருஷம், மக மாதம், 11ஆம் நாள் திங்கட்கிழமை (16-2-1517)  மாமன்னர் கிருஷ்ண தேவராயர் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வருகை தந்தார். 3. அன்றைய தினம் […]

Return of NamperumaaL – NamperumaaL Asthaanam Thirumbiya naaL

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 2010 மே, 31ஆம் நாள், நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் 639 ஆண்டுகளுக்குப் பின்பு திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்த நாள். அதைப் பற்றிய சில சிந்தனைகள். 1) ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபீடத்தை அலங்கரித்தவர்களில் மணக்கால் நம்பியும் ஒருவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.929 -1006. இவர் காலத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது (இதை ஒட்டியர் கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.) பாதுகாப்புக் கருதி அழகியமணவாளன் திருமாலிருஞ்சோலையில் […]

Srirangam Koyil Vasanthothsavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நம்பெருமாள் கண்டருளும் வைகாசி வஸந்தோத்ஸவமும், நின்றுபோன ப்ரஹ்மோத்ஸவமும் ஐ. வஸந்தோத்ஸவம் : 1)அண்ணப்பஉடையார் காலத்தில் (கி.பி. 1436) தற்போதுள்ள வஸந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. 2) இந்த வஸந்தோத்ஸதவத்திற்கு கேடாக்குழித் திருநாள் என்று பெயர்.  3) இவ்வாறு வஸந்தோத்ஸவம் நடைபெறுவதற்காக மல்லிதேவன் புத்தூர் என்ற கிராமம் திருவிடையாட்டமாகத் (தானமாகத்) தரப்பட்டது. 4)வழியடிமைநிலையிட்ட உத்தமநம்பி இந்த விழாவை அண்ணப்பஉடையார் சார்பில் ஏற்படுத்தி வைத்தார். 5) இந்த அண்ணப்பஉடையார் ஆயிரங்கால் மண்டபத்தைப் […]

Chithirai ThirunaaL Flex 2

ஸ்ரீ:            ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: சித்திரை விருப்பன் திருநாள்-2  17) எட்டாம் நாள் உத்ஸவத்தின்போது தேரடியிலும், த்வஜஸ்தம்பத்தின் அருகிலும், தலையிலே தேங்காய்களை உடைத்துக் கொள்வது, அவரவர் குடும்பத்தில் ஒருவர்மேல் நம்பெருமாள் ஆவேசம் கொள்ளுதல் ஆகிய நிகழ்ச்சிகளை இந்த பிரம்மோத்ஸவத்தின்போது காணலாம்.  18) சித்திரைத் தேருக்கு முன்தினம் (8ஆம் திருநாளன்று) காலையில் நம்பெருமாள் வெள்ளிக்குதிரையில் வீதிவலம் வருதலை,  “குதிரை வாஹனமேறி, மன்னர்கள் பலரும் ஊழியம் புரிய, ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபரணங்களை அணிந்துகொண்டு கஸ்தூரி […]

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: சித்திரை விருப்பன் திருநாள்-1 1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது. 2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார். 3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய […]

Gajendra mOksham/ChithrA pOurNami

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: சித்திரா பௌர்ணமிப் புறப்பாடும், கஜேந்திர மோக்ஷமும்  1. சித்திரா பூர்ணிமை (பௌர்ணமி) திருவூறல் திருநாள் (கஜேந்திர மோக்ஷம்) திருவரங்கத்தில் 28-4-2010 அன்று நடைபெற உள்ளது.  2. நம்பெருமாளுக்கு அதிகாலையிலேயே முதல் திருவாராதனமும் பொங்கல் நிவேதனமும் ஆனபிறகு, அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  3. நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு கருவறையில் எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு பூபாலராயன் என்ற பெயர் அமைந்துள்ளது. (முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு (கி.பி. 1250-1284) அமைந்துள்ள பல சிறப்புப் பெயர்களில் […]

Srirangam Kodai Uthsavam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோடை உத்ஸவம்  1) சித்திரை சுக்-ல-ப-க்ஷ பஞ்சமி திதியில்-கோடைத்திருநாள் தொடக்கம். பஞ்சமி-முதல்  ஐந்து நாட்கள் வெளிக் கோடை என்றும், பின் ஐந்து நாட்கள் உள்கோடை என்றும்  இந்த உத்ஸவம் கொண்டாடப்படுகிறது.  2) நவமி-கோடை உத்ஸவத்தின் நவமி திதியில் திருவரங்கத்தில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஸ்ரீராமநவமியன்று நம்பெருமாளுக்கும் சேரகுலவல்லித் தாயாருக்கும் சேர்த்தி நடைபெறும். உலகம் முழுவதும் பங்குனியில் ஸ்ரீராமநவமி உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் இந்த உத்ஸவம் சித்திரையில் நடை-பெ-று-வ-தா-ல் […]

Sriranganachiyar Adhyayanothsavam

ஸ்ரீ:       நம்மாழ்வார் திருவடிகளே சரணம். திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:   “ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் நடைபெறும் பகல்பத்து இராப்பத்துத்திருநாட்கள்” (8-01-2010 முதல் 18-01-2010 வரை) 1) நம்பெருமாள் திருமுன்பு அரையர்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப் பெற்றதுபோல் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் அரையர்களும் அத்யாபகர்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த ஸேவையை செய்திடுவர். இதனை தாயார் “அத்யயனோத்ஸவம்” என்று அழைப்பர். 2)இந்த உத்ஸவத்தின் முதல் 5 நாட்களில் முதலாம் ஆயிரம், இரண்டாம் ஆயிரம் ஆகியவை […]