ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நவராத்ரி உத்ஸவம் (8-10-2010 முதல் 16-10-2010 ஈறாக) 1. நவராத்ரி முதல்நாள் வேதவிண்ணப்பம்: ஸ்ரீரங்கநாய்ச்சியார் நித்தியப்படிபோல காலையில் திருவாராதனமாகி பொங்கல் அமுதுசெய்ததும், வேதவ்யாஸ பட்டர் எழுந்தருளி வேதவிண்ணப்பம் நடைபெறும். 2. சென்ற வருடம் மார்கழி அத்யயனோத்ஸவ ஏகாதசி அன்று பெரிய பெருமாள் திருமுன்பே வேதம் தொடங்கின வேதவ்யாஸ பட்டர் தான் மறுவருடம் நவராத்திரி முதல் திருநாளன்று ஸ்ரீரங்கநாய்ச்சியார்  ஸந்நிதியிலும் வேதம் தொடங்கும் முறையைப் பின்பற்றி வருகிறார்கள். 3.  […]