Threat to Thirumangai AzhwAr’s thirumadhil at Srirangam temple

திருவரங்கத்தில் அரங்கனைக் காண வரும் ஸேவார்த்திகள் ஆலிநாடன் திருமதிலைத்தாண்டி குலசேகரன் திருச்சுற்றில் உள்ள நாழிகை கேட்டான் வாசலுக்கு, ரயில் நிலையங்களில் காணப்படும் Over Bridge போன்றதொரு அமைப்பு உண்டாக்கப்பட்டு அதன்வழியாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் விளைவாக ஸேவார்த்திகள் அனைவரும் திருமங்கையாழ்வார் திருமுடிமேல் கால் வைத்து நடந்து செல்ல உள்ளனர். திருமங்கையாழ்வாரைக் காட்டிலும் அவர் எழுப்பிய திருமதிலே அரங்கனுக்கு அரணாக அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாருக்கு அமைந்துள்ள பெருமை அவர் எழுப்பிய மதிலுக்கும் உண்டு. For more detailed information, […]

Return of NamperumaaL – NamperumaaL Asthaanam Thirumbiya naaL

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 2010 மே, 31ஆம் நாள், நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் 639 ஆண்டுகளுக்குப் பின்பு திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்த நாள். அதைப் பற்றிய சில சிந்தனைகள். 1) ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபீடத்தை அலங்கரித்தவர்களில் மணக்கால் நம்பியும் ஒருவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.929 -1006. இவர் காலத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது (இதை ஒட்டியர் கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.) பாதுகாப்புக் கருதி அழகியமணவாளன் திருமாலிருஞ்சோலையில் […]

Ramanusa Vaibhavam Flex 3

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம்-3  35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்.  36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ […]

Sriranganachiyar Adhyayanothsavam

ஸ்ரீ:       நம்மாழ்வார் திருவடிகளே சரணம். திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:   “ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் நடைபெறும் பகல்பத்து இராப்பத்துத்திருநாட்கள்” (8-01-2010 முதல் 18-01-2010 வரை) 1) நம்பெருமாள் திருமுன்பு அரையர்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப் பெற்றதுபோல் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் அரையர்களும் அத்யாபகர்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த ஸேவையை செய்திடுவர். இதனை தாயார் “அத்யயனோத்ஸவம்” என்று அழைப்பர். 2)இந்த உத்ஸவத்தின் முதல் 5 நாட்களில் முதலாம் ஆயிரம், இரண்டாம் ஆயிரம் ஆகியவை […]

Ramanusa Vaibhavam Part II

ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமாநுசர் வைபவம் – 2 22. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் புதிய கோணங்களில் பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல். 23. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்; காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்; இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த […]

Kaisika Ekadasi / Nampaaduvaan

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரணம். ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. 3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது. 4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் […]

MaNavALa MamunigaL Thiruvadhyayanam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவ சிறப்புகள் 1) மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியில் ஸ்ரீமணவாளமாமுனிகள் தனது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை திருவடியை அடைந்தார். விரோதி ஆண்டு மாசி 28ஆம் நாள்  வெள்ளிக்கிழமை (12-3-2010) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவத்யயன உத்ஸவம் தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறும். அன்றையதினம் பெரியகோயில் முறைகார அர்ச்சகர் ஸந்நிதிக்கு எழுந்தருளி பெரியதிருமடைப்பள்ளியிலிருந்து எழுந்தருளப்பண்ணப்பட்ட ப்ரஸாதங்களை அமுது செய்விப்பார். அதன்பிறகே பெரியபெரு மாளுக்கு பெரிய அவசரம் […]