ஸ்ரீ: சூடிக்கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “திருவாடிப்பூர உத்ஸவம்” (12-8-2010) 1. “மெய்யடியாரான” விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப்பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நக்ஷத்ரத்திலே ஆண்டாள் அவதரித்தாள். 2. பெரியாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு“சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள்போலே வளர்த்து வந்தார். 3. ஸ்ரீமணவாளமாமுனிகள் இந்த வைபவத்தை “இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக வன்றோ இங்காண்டாளவதரித்தாள்,குன்றாத வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்) னையிகழ்ந்து ஆழ்வார் […]