Sri Ramanusar 1000 Book release function Invitation

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

25.4.2012 அன்று மலை 4 மணிக்கு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ‘இராமாநுசர் ஆயிரம்’ – (முதல் மூன்று பாகங்கள்) – 671 தலைப்புகள் கொண்ட நூல் வெளியீடு.
ஸ்வாமி எம்பெருமானாரின் ஆயிரமாவது ஆண்டு அவதார திருநக்ஷத்திரோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூல் (9 பாகங்கள்) நந்தன மற்றும் விஜய ஆண்டுகளில் (கி.பி. 2012 மற்றும் 2013) வெளிவர உள்ளன. இராமாநுசரின் – வாழ்க்கை – வரலாறு – அவர் அருளிச் செய்த நூல்கள், அவருடைய பெருமைகளை பறைசாற்றும் துதிநூல்கள், இராமாநுசருடைய சமுதாயச் சிந்தனைகள், கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்கள், அர்ச்சையில் அவருக்கு நடைபெறும் வைபவங்கள், அவர் அருளிச்செய்த வேதாந்த ஸாரம் என்னும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கலைக்களஞ்சியமாக (உணஞிதூஞிடூணிணீச்ஞுஞீடிச்), இந்த நூலின் முதல் மூன்று பாகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு குடைக்கீழ் அனைத்து குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசர் அருளிச்செய்த வேதாந்த ஸாரத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு வெளியீட்டில் இராமாநுசருடைய மற்றைய க்ரந்தங்களான வேதார்த்த ஸங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம், வேதாந்ததீபம், கத்யத்ரயம், நித்யம் ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு, இன்னும் சில வரலாற்று நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள், பல திவ்யதேசங்களில் இராமாநுசருடைய அர்ச்சா திருமேனிக்கு அளிக்கப்பட்டு வரும் மரியாதைகள், இராமானுசரின் சீரிய மேலாண்மைக் கொள்கைகள், ராமாநுஜ ஸம்பிரதாயம் தமிழ் நாடு தவிர்ந்த மற்றைய தென் வடமாநிலங்களில் நிலை கொண்ட விதம் ஆகியவை இடம் பெற உள்ளன.
நந்தன ஆண்டு சித்திரை மாதம் 13ஆம் நாள் புதன் கிழமை (25.4.2012) ‘இராமாநுசர் ஆயிரம்’ என்ற நூலின் முதல் மூன்று பாகங்கள் வெளியிடப்பட உள்ளன. ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி, யதிராஜஜீயர் ஸ்வாமி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி 23 வது பட்டம் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆகியோர்கள் எழுந்தருளி விழாவினைச் சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சிநிரல்
இடம்: ஸ்ரீ யதிராஜ ஜீயர் மடம் – ஸந்நிதி தெரு – ஸ்ரீபெரும்புதூர்
நேரம்: மாலை 4.00 மணி
வரவேற்புரை: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர்
(1) நூலை வெளியீடு மற்றும் மங்களாசாஸனம் வழங்குதல் ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி.
(2) நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொள்வோர்: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி, யதிராஜ ஜீயர் ஸ்வாமி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமாநுஜ ஜீயர் ஸ்வாமி 23 வது பட்டம் ஸ்ரீமணவாள மாமுனிகள் மடம் ஸ்ரீவில்லிபுத்தூர்.
(3) இந்த நூல் வெளியீட்டிற்கு நிதியுதவி புரிந்த புரவலர்கள் A.N.S. Jewelry Sri.A.S. ராஜேந்திரன், Sri.A.S.  ஸ்ரீராம் ஆகியோருக்கு
ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி எம்பார் ஜீயர் ஸ்வாமி திருக்கரங்களால் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுதல்.
ரூபாய் 800 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இராமாநுசர் ஆயிரம் முதல் மூன்று பாகங்கள் A.N.S.Jewelry  உரிமையாளர்கள் கைங்கர்ய ஸ்ரீமான்கள்.Sri.A.S. ராஜேந்திரன், Sri.A.S.  ஸ்ரீராம் மற்றும் மேல்நாடு வாழ் அன்பர்களின் நிதியுதவி கொண்டு ரூபாய் 300 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய் 500க்கு விற்பனைக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மூன்று பாகங்களின் அடிப்படையில் பரிசுப் போட்டி ஒன்றும் நடைபெற உள்ளது. இந்த மூன்று பாகங்களுக்கான கேள்வித் தாள் ஒன்று இந்த நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான விடையை 1.7.2012க்குள் எமது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசு ஒன்று கீண்.3000, இரண்டாம் பரிசு இரண்டு, ஒவ்வொரு வருக்கும் கீண்.2000, மூன்று மூன்றாம் பரிசுகள் ஒவ்வொரு வருக்கும் கீண்.1000. மொத்தத்தில் கீண். 10,000 பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
இந்த நூலின் 1800 பக்கங்களில் அமைந்துள்ள மணிப்ரவாளச் சொற்களுக்கு மட்டும் ஓர் ‘அரும்பொருள் சொல் அகராதி’ உருவாக்கப்பட உள்ளது. பாமரனின் பார்வையில் எந்தெந்தச் சொற்களுக்குப் பொருள் விளங்கவில்லையோ, அவற்றை இந்த நூலைப் படிப்போர் ஒருமாத கால அவகாசத்திற்குள் எமது அலுவலகத்திற்கு எழுதி அனுப்பினால் நந்தன வருஷம் ஆனி திருவாதிரை தொடங்கி இந்த மூன்று பாகங்களுக்கான அருஞ்சொற் பொருள் அகராதி விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த மூன்று பாகங்களின் அடிப்படையில் பல்வேறு வயதுவரம்பிற்குட்பட்டவர்கள் இடையே பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியனவும் விரைவில் நடைபெற உள்ளன. ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ.திரிதண்டி ஸ்ரீமந் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமியின் ஆசியுடன்,  தேர்ச்சிப் பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கரும்பு தின்னக் கூலி போல் அமைந்துள்ள இந்த விற்பனைச் சலுகையினை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 500 பிரதிகளே அச்சிடப்பட்டுள்ளன. சலுகைவிலையில் இராமானுசர் 1000 மூன்று பாகங்கள் 31.5.2012 வரையில் தான் விற்பனைக்கு அளிக்கப்படும் அந்தத் தேதிக்குள் மூன்று பாகங்களை வாங்குபவர்கள் மட்டுமே பரிசுப் போட்டியில் பங்கு கொள்ள இயலும்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவானமாமலை ஜீயர் மடத்தில் உள்ள எமது விற்பனை நிலையத்தில் ரூபாய் 500 செலுத்தி 25.4.2012ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்துகொள்வோர்க்கே ரூபாய் 800 விலைநிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மூன்று பாகங்களும் ரூபாய் 500க்கு 27.4.2012 வரை கிடைக்கும். அத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ள கேள்வித்தாளை பரிசுப்போட்டியில் கலந்து கொள்ள எண்ணம் கொண்டோர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நூலின் பிரதிகளை 27.4.2012 தேதிக்குப் பிறகு, 214 கீழை உத்தர வீதி திருவரங்கம் திருச்சி – 6 என்ற முகவரியில் 31.05.2012 வரை ரூபாய் 600 செலுத்தி
(நூலின் சலுகை விலை 500 + 100 கூரியர் சார்ஜ்) பெற்றுக் கொள்ளலாம். சென்னை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயில் இந்தப் புத்தகம் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்காது.
இந்த நூல் வெளியீட்டிற்கு அனைத்து இராமாநுசன் அடியார்களும் வருகை தந்து விழாவினைச் சிறப்பித்திட வேண்டுகிறேன்.***