Srirangam NamperumaL Oonjal Utsavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நம்பெருமாள் கண்டருளும் ஊஞ்சல் திருநாள் (25-10-2010 தொடங்கி 2-11-2010 ஈறாக) 1. முதல் திருநாள் :  இது ஒன்பது நாள் உத்ஸவம்.  ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று இந்த உத்ஸவம் பூர்த்தியாக வேண்டியதால், த்ருதீயை அன்று இது ஆரம்பிக்கப்படும். 2.  த்ருதீயை அன்று நம்பெருமாள் நித்தியப்படிபோலே பெரிய அவசரத் திருவாராதனமாகித் தளிகை அமுது செய்தபிறகு, உத்ஸவத்துக்காக ரக்ஷா பந்தனம் செய்து கொள்வார். 3. இந்த உத்ஸவத்துக்கு ம்ருத் […]

Vijayadasami in Srirangam Thayar Sannidhi

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: புரட்டாசி நவராத்ரி நவமி, மற்றும் தசமி ஆகிய நாட்களில் நடைபெறும் வைபவங்கள் (16, மற்றும் 17-10-2010) ஐ.நவமி அன்று நடைபெறும் வைபவங்கள் 1. பெரியபெருமாள் பெரிய அவசரம் அமுது செய்ததும், கருகூல நாய்ச்சியார், நாயகர் அறை நாய்ச்சியார், சுக்ரவார நாய்ச்சியார், (இவர் பரிமள அறையில் எழுந்தருளியுள்ளார். இது யாகசாலைக்கு அருகில் உள்ளது.) அரவிந்த நாய்ச்சியார், (அன்னமூர்த்தி ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.) ஹயக்ரீவர், ஸரஸ்வதி, செங்கமல நாய்ச்சியார், குருகூர் நாய்ச்சியார், […]

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: நவராத்ரி உத்ஸவம் (8-10-2010 முதல் 16-10-2010 ஈறாக) 1. நவராத்ரி முதல்நாள் வேதவிண்ணப்பம்: ஸ்ரீரங்கநாய்ச்சியார் நித்தியப்படிபோல காலையில் திருவாராதனமாகி பொங்கல் அமுதுசெய்ததும், வேதவ்யாஸ பட்டர் எழுந்தருளி வேதவிண்ணப்பம் நடைபெறும். 2. சென்ற வருடம் மார்கழி அத்யயனோத்ஸவ ஏகாதசி அன்று பெரிய பெருமாள் திருமுன்பே வேதம் தொடங்கின வேதவ்யாஸ பட்டர் தான் மறுவருடம் நவராத்திரி முதல் திருநாளன்று ஸ்ரீரங்கநாய்ச்சியார்  ஸந்நிதியிலும் வேதம் தொடங்கும் முறையைப் பின்பற்றி வருகிறார்கள். 3.  […]

Chakkarathazhvar Vaibhavam

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “சக்கரத்தாழ்வார் வைபவம்” 1. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வார் விசேஷமாக ஸேவை ஸாதிக்கிறார். 2. ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார் நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனுடைய திருவாழியாழ்வானானபடியாலே ஸ்ரீரங்க திவ்யக்ஷேத்திரத்திலே இவருக்குத் தனி மஹிமை உண்டு. 3. இவரை வந்து ஸேவித்துப் பிரதக்ஷிணம் செய்து வந்தால் ஸகல தோஷங்களுக்கும் பரிஹாரம் கிடைக்குமாதலால், இன்றும் எல்லோரும் வந்து வழிபட்டுப் பலன் பெற்று வருவதைக் கண்கூடாகக் காணலாம். 4. ஸ்ரீமன்நாராயணன் வலக்கரத்தில் உள்ள […]

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுனயே நம: அஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத்அழகியசிங்கரின் ராஜகோபுரத் திருப்பணி 1. ஆவணி ஹஸ்த நக்ஷத்ரத்தில் தோன்றியவர் ஸ்ரீஅஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமி. 2. ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த பெரியோர்களில் குறிப்பிடத்தக்கவர் முக்கூர் அழகியசிங்கர் என்று ப்ரஸித்தி பெற்ற 44ஆவது பட்டம் அழகியசிங்கர் ஸ்வாமியாவார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 10-9-2010 அன்று நடைபெறவுள்ளது. 3. 236அடி உயரமும், 13 நிலைகளும் கொண்ட தென்கிழக்கு […]

Koyil Sri Jayanthi/Pancharathra Sri Jayanthi

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “கிருஷ்ணஜயந்தி” (2.9. 2010 வியாழக்கிழமை ஆவணி அஷ்டமியோடு கூடிய ரோஹிணி) திருவரங்கத்தில் ஸ்ரீஜயந்தி கொண்டாட்டங்கள் 1. நம்பெருமாள் பொங்கல்  அமுது செய்து புறப்பட்டு ஸ்ரீபண்டார மண்டபம் எழுந்தருளுவார். 2.  இந்த மண்டபத்தைக் கட்டிவைத்து உத்ஸவத்தையும் நடத்தி வைத்த உத்தமநம்பி அய்யங்காருக்கு ஸேவை மரியாதை அனுக்ரஹிப்பார். 3.  பிறகு திருமஞ்சனம். கிருஷ்ணனுடைய அவதார நிமித்தம் திருவாரா தனத்தில் பெருமாளுக்கு கண்டருளப் பண்ணும் எண்ணெய் அரையரால் கோஷ்டிக்கு விநியோகம் செய்யப்படும். […]

AndaL Thiruvadippooram

ஸ்ரீ: சூடிக்கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம: “திருவாடிப்பூர உத்ஸவம்” (12-8-2010) 1. “மெய்யடியாரான” விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநந்தவனத்தில் திருத்துழாயைப் பயிரிடுவதற்காக மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தபோது, பூமிப்பிராட்டியின் அம்சமாகத் திருவாடிப்பூர நக்ஷத்ரத்திலே ஆண்டாள் அவதரித்தாள். 2. பெரியாழ்வார் கண்டெடுத்த குழந்தைக்கு“சுரும்பார்க் குழற்கோதை” என்று திருநாமம் சாற்றி திருமகள்போலே வளர்த்து வந்தார். 3. ஸ்ரீமணவாளமாமுனிகள் இந்த வைபவத்தை “இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக வன்றோ இங்காண்டாளவதரித்தாள்,குன்றாத வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்) னையிகழ்ந்து ஆழ்வார் […]