ஸ்ரீ பாஷ்யம் எளிய தமிழ் உரை Sri Bhashyam/ Sri Bashyam – Complete set 15 Volumes

Sale!

6,500.00 5,000.00

Sri Bhashyam full set . This set covers all the 4 Adhyayams  with simplified Tamil commentary by Sri Vaishnava Sri Krishnamachari .

 

 

Description

ஸ்ரீ:
அனைத்துத்தரப்பினரும் படித்துப் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு ஸூத்ரமும் 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விரிவுரை எழுதப்பட்டுள்ளது.

1. அதிகரணத்தின் பெயர். 2. அதிகரணங்களில் அமைந்துள்ள ஸூத்ரங்களின் எண்ணிக்கை. 3. விவரிக்கப்படும் ஸூத்ரம் தமிழ் எழுத்தில் ஒலிக்குறியீடுடன். 4. விவரிக்கப் படவுள்ள ஸூத்ரத்தின் பதவுரை தமிழில். 5. அந்த ஸூத்ரத்திற்கான பதவுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. 6.எம்பெருமானார் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யம் ஒலிக்குறியீடு களுடன் தமிழ் எழுத்துக்களில். 7. ஸ்ரீபாஷ்யத்திற்கான ஆங்கில மொழிபெயர்ப்பு. 8. அந்த ஸூத்ரத்திற்கான ஸ்ரீபாஷ்ய விரிவுரை யின் திரண்டபொருள். 9. ஸ்ரீபாஷ்யத்திற்கான விரிவுரை – மேற்கோளாய் கொள்ளப்பட்ட உபநிஷத், ஸ்ம்ருதி, இதிஹாச, புராண வாக்யங்களுக்கான தமிழ்மொழிபெயர்ப்புடன் கூடியது. 10. ஸ்ரீபாஷ்ய விரிவுரையின் ஊடே ஆங்காங்கே ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்புகள். 11. ஆழ்வார் பாசுரங்களுக்கான ‘ஐககண்ட்யம்’ (கருத்தொற்றுமை) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக “வேதம் தமிழ் செய்த மாறன்” என்ற தலைப்பில் இயற்பாவில் அமைந்துள்ள திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய நான்கு பிரபந்தங்களில் அமைந்துள்ள பாசுரங்களுக்கான வேதாந்த விழுப்பொருள் கொண்டு,  ‘இதுகொண்டு பாஷ்யகாரர் ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர்’ (ஆசார்ய ஹ்ருதயம் – 65) என்னும் ஸூத்ரத்திற்கு விளக்கவுரையாக எழுதப்படவுள்ளது. இதுகாறும் இத்தகைய தொரு விளக்கநூல் எழுதப்படவில்லை.

இந்த நூலில் ‘வேதம்’ என்னும் பகுதியில் சுமார் 400 பக்கங்களுக்குமேல் வேதத்தின் பல்வேறு கிளைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அமைந்துள்ள குறிப்புகள் வேதத்தைப் பற்றிய அடிப்படை அறிவினைப் பெற உதவும்.

இந்த 15 புத்தகங்களுடன் ஸ்ரீபாஷ்யம் விளக்கவுரை  முழுமை பெறுகிறது. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அத்யாயங்களுக்கான (12 பாதங்களுக்கான) விரிவுரை 7 புத்தகங்களாகவும்,

1) பாகம் 6 – பகுதி 9
ஸ்ரீபாஷ்யம் 2ஆம் அத்யாயம், முதல் பாதம், பக்கங்கள் = 428

2) பாகம் 6 – பகுதி 10
ஸ்ரீபாஷ்யம் 2ஆம் அத்யாயம், இரண்டாம் பாதம், பக்கங்கள் = 372.

3) பாகம் 6 – பகுதி 11
ஸ்ரீபாஷ்யம் 2ஆம் அத்யாயம், மூன்று மற்றும் நான்காம் பாதங்கள், பக்கங்கள் = 408.

4) பாகம் 6 – பகுதி 12
ஸ்ரீபாஷ்யம் 3ஆம் அத்யாயம், முதலிரண்டு பாதங்கள், பக்கங்கள் = 384.

5) பாகம் 6 – பகுதி 13
ஸ்ரீபாஷ்யம் 3ஆம் அத்யாயம் மூன்றாம் பாதம், பக்கங்கள் = 524.

6) பாகம் 6 – பகுதி 14
ஸ்ரீபாஷ்யம் 3ஆம் அத்யாயம் நான்காம் பாதம், பக்கங்கள் = 256.

7) பாகம் 6 – பகுதி 15
ஸ்ரீபாஷ்யம் 4ஆம் அத்யாயம் 1,2,3 மற்றும் 4ஆம் பாதம் ஆகியவற்றிற்கான விரிவுரை, பக்கங்கள் = 468.

இந்த 15 பகுதிகளுக்கான  மொத்த பக்கங்கள் சுமார் 6,500.

ஸ்ரீபாஷ்யம் மொத்தம் 15 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர  பாகம் 7.
‘வேதம் தமிழ் செய்த மாறன்’ – பக்கங்கள் = 700.விலை தனி.